அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
சிவகாசி அருகே அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வு பணி
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது.
தற்போது தோண்டப்பட்டு வரும் ஏழாவது அகழாய்வு குழி மையத்தில் இருப்பதால் தொடர்ந்து பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றன. நேற்று தோண்டப்பட்டதில் பழங்காலத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஆபரணங்கள் பண்டைக்காலத்தில் யானைத்தந்தத்தால் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
அகல் விளக்குகள்
மேலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஏராளமான அகல்விளக்குகள் கிடைத்துள்ளன. மண்பாண்ட பொருட்கள் சேதம் அடைந்த நிலையிலும், சேதம் அடையாத நிலையிலும் கிடைத்துள்ளன. ஏழாவது அகழாய்வு குழி தற்போது 5 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது.
5 ஆடி ஆழத்தில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில அடிகள் தோண்டப்படும் போது ஏராளமான பண்டைக்காலத்தில் பயன்படுத்த பட்ட விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 8-வது அகழாய்வு குழி இன்று தோண்டப்படுவதாகவும் அதிலும் ஏராளமான கலைநயமிக்க பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story