தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது-அமைச்சர் மூர்த்தி பேச்சு


தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது-அமைச்சர் மூர்த்தி பேச்சு
x
தினத்தந்தி 18 May 2022 12:50 AM IST (Updated: 18 May 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது-அமைச்சர் மூர்த்தி பேச்சு

சோழவந்தான்
சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், கென்னடி என்ற கண்ணன், சிறைசெல்வம், பசும்பொன்மாறன், தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், யூனியன் துணைச் சேர்மன் தனலட்சுமி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.  முகவை ராமன், மாணவரணிஅமைப்பாளர் மருதுபாண்டியன்,  நகரச்செயலாளர் முனியாண்டி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, சோழவந்தானில் 10 ஆண்டு காலமாக மக்கள் பயன்பாடின்றி கிடக்கும் மேம்பாலப் பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும். இப்பகுதியில்  தென்னை நார் தொழிற்சாலை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் விட்டு சென்றாலும் தி.மு.க. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதில் 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் கிராமம் தோறும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை மூலம் பட்டா வழங்குதல் சிறப்பு முகாம் நடத்தப்படும். தமிழகத்தில் நிரந்தர முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்வார் என கூறினார்.

Next Story