ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் செயல்படுவதால் பிரசவித்த தாய்மார்கள் குழந்தையுடன், வீடு திரும்ப பலமணி நேரம் காத்திருக்கும் நிலை
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் செயல்படுவதால் பிரசவித்த தாய்மார்கள் குழந்தையுடன் வீடு திரும்ப பல மணி நேரம் காத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் செயல்படுவதால் பிரசவித்த தாய்மார்கள் குழந்தையுடன் வீடு திரும்ப பல மணி நேரம் காத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இலவச ஆம்புலன்ஸ்
சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மருத்துவமனையில் பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட சீமாங் என்ற பிரிவு செயல்படுகிறது.
இந்த மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக வரும் நிறைமாத கர்ப்பிணிகளை வீட்டில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து வருவார்கள். மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பின்னர் தாயையும் குழந்தையையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களின் வீடுகளுக்கு இலவசமாக கொண்டு இறக்கி விடுவார்கள். சிவகங்கை மருத்துவமனையில் இருந்து தினசரி 10 லிருந்து 20 தாய்மார்கள் குழந்தைகளுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக ஏற்கனவே 2 ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையில் இயங்கி வந்தன.
பல மணி நேரம்
தற்போது இங்கிருந்த ஒரு ஆம்புலன்ஸ் வேறு இடத்திற்கு அனுப்பபட்டுவிட்டது. இதனால் மீதமுள்ள ஒரு ஆம்புலன்ஸ் மூலமாகவே பிரசவித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பிரசவித்த குழந்தையுடன் தாய்மார்கள் பல மணி நேரம் ஆஸ்பத்திரியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதில் சிரமம் இருப்பதால் பல பெண்கள் தனியார் வாடகை வாகனத்தில் வீடுகளுக்கு செல்கின்றனர்.
எனவே மீண்டும் ஏற்கனவே இருந்தபடி 2 ஆம்புலன்ஸ்களை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story