கல்லறை தோட்டத்தை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
சாணார்பட்டி அருகே கல்லறை தோட்டத்ைத அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள வேலாம்பட்டி கிராமத்துக்கான கல்லறை தோட்டம் கொசவப்பட்டி பகுதியில் உள்ளது. இந்த கல்லறை ேதாட்டம் உள்ள இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்றும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, கொசவப்பட்டியில் உள்ள கல்லறை தோட்டத்தை அகற்ற உத்தரவிட்டது.

அதன்பேரில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொசவப்பட்டியில் உள்ள கல்லறை தோட்டம் அகற்றப்படும் என நோட்டீஸ் ஒட்டினர். தகவல் அறிந்த வேலாம்பட்டி பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து, கல்லறை தோட்டத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாற்று இடம் வழங்கிய பின் கல்லறை தோட்டத்தை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த துணை தாசில்தார் தங்கமணி, சாணார்பட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story