களக்காட்டில் பரிதாபம்: மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


களக்காட்டில் பரிதாபம்: மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 May 2022 3:37 AM IST (Updated: 18 May 2022 3:37 AM IST)
t-max-icont-min-icon

களக்காட்டில் மகள் காதல் திருமணம் செய்ததால், தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

களக்காடு:
களக்காட்டில் மகள் காதல் திருமணம் செய்ததால், தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
நெல்லை மாவட்டம் களக்காடு கோவில்பத்து காவல் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம். விவசாயி. இவருடைய மனைவி கனியம்மாள் (வயது 42). இவர்களுக்கு உமா (22) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரும், உமாவும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் உமா, சுந்தரின் வீட்டில் இருந்தார்.
தாய் தற்கொலை
இதனை அறிந்த அருணாசலம், அவருடைய மனைவி கனியம்மாள் ஆகியோர் சுந்தரின் வீட்டுக்கு சென்று உமாவை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் உமா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த பெற்றோர் திரும்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கனியம்மாள் தனது வீட்டின் அருகில் உள்ள பூவரசு மரத்தில் திடீரென்று கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதனைப் பார்த்த அருணாசலம் மற்றும் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
உடனே இன்ஸ்பெக்டர் ஜேக்கப் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கனியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காட்டில் மகள் காதல் திருமணம் செய்ததால், தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story