கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 May 2022 3:39 AM IST (Updated: 18 May 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

பெங்களூரு:  பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தலகவாரா கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 19). இவர் தொட்டபள்ளாப்புரா டவுனில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக விஜயலட்சுமி, கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. மேலும் அவர் அடிக்கடி செல்போனில் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் கல்லூரிக்கு ஒழுங்காக செல்லும்படியும், செல்போனை பயன்படுத்த கூடாது என்றும் பெற்றோர் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த விஜயலட்சுமி கிராமத்தில் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்

Next Story