வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
நெல்லை டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் விக்னேஷ் (வயது 26). இவர் டவுன் பர்வத சிங்கராஜா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில், டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விக்னேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர மேற்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமாருக்கு பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று விக்னேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன், விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story