வங்கியை பொதுமக்கள் முற்றுகை
கூடமலையில் வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே கூடமலையில் உள்ள ஒரு வங்கியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் பச்சமலை ஊராட்சியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் நேற்று முதியோர் ஓய்வூதியம் வாங்குவதற்காக கூடமலையில் உள்ள வங்கிக்கு வந்துள்ளனர். அப்போது 3 மணி நேரம் ஆகியும் பணம் தராததால் பச்சமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது, சர்வர் வேலை செய்யவில்லை என்பதால் தாமதம் ஆகிறது என்று கூறினார். அதன்பின்புமதியம் 2 மணி அளவில் அனைவருக்கும் பணம் கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story