ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்


ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 7:31 AM IST (Updated: 18 May 2022 7:31 AM IST)
t-max-icont-min-icon

3 சதவீத அகவிலைப்படியை வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

சேலம்:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று கோட்டை மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். இதில் 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story