மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி
தேவியாக்குறிச்சியில் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.
தலைவாசல்:
தேவியாக்குறிச்சியில் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.
தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 71). தி.மு.க. பிரமுகரான இவர் தேவியாக்குறிச்சி ஊராட்சியின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 4-ந் தேதி தலைவாசல், தேவியாக்குறிச்சி பகுதிகளில் சூறாவளி காற்றுடன் இரவில் பலத்த மழை பெய்தது. அப்போது தேவியாக்குறிச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியின் வீட்டின் சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுப்பிரமணி மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து சுவர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
பின்னர் அங்கிருந்து ேகாவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து வருவாய்த்துறையினரும் விசாரித்து வருகின்றனர். சுவர் இடிந்து பலியான சுப்பிரமணிக்கு கலாவதி (61) என்ற மனைவியும், பாரதி என்ற மகளும் உள்ளனர். பாரதிக்கு திருமணம் ஆகி விட்டது.
மழைக்கு சுவர் இடிந்து விழுந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி இறந்த சம்பவம் தேவியாக்குறிச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story