பொதுமக்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆத்தூரில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் கார்மேகம் கூறினார்.
சேலம்:
பொதுமக்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆத்தூரில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் கார்மேகம் கூறினார்.
ஆத்தூரில் ஜமாபந்தி
ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசுச்சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.
பின்னர் கலெக்டர் கார்மேகம் பேசும் போது, தற்போது நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் வாரிசு சான்று கேட்டு விண்ணபித்த ஒருவருக்கு உடனடி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் மனுக்கள் மீது அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
நில அளவை கருவிகள்
தொடர்ந்து ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் பராமரிக்கப்படும் வருவாய்த்துறை தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்தார். அதே போன்று நில அளவை கருவிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இதில் உதவி கலெக்டர் சரண்யா, ஆத்தூர் நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா, தாசில்தார் மாணிக்கம், அட்மா குழு தலைவர் செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story