அமெரிக்க ஆஸ்பத்திரியில் இருந்தபடி தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர்.
அமெரிக்க ஆஸ்பத்திரியில் இருந்தபடி தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர்.
அமெரிக்க ஆஸ்பத்திரியில் இருந்தபடி தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர்.
1984-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்றார். இந்த தேர்தல், தமிழக வரலாற்றில் மறக்க முடியாத தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.
இந்த தேர்தல் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர், அமெரிக்காவில் உள்ள பிரபலமான புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த தேர்தலின் போது இ.காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது.
எம்.ஜி.ஆர். நேரடியாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் பிரசார காலம் முடிந்து வாக்குப்பதிவு வரை அமெரிக்காவில்தான் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்தார். தேர்தல் முடிவு வெளியான பிறகுதான் அவர் தமிழகம் திரும்பினார்.
தேர்தல் பிரசார கால கட்டத்தில் எம்.ஜி.ஆர். பற்றி வதந்தி பரவியது. அதற்கெல்லாம் செவி சாய்க்காத வாக்காளர்கள், எம்.ஜி.ஆர். மீது கொண்ட பாசத்தாலும், பற்றின் காரணமாகவும் அவரை வெற்றி பெறச் செய்தனர். இந்த தேர்தலில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 117 வாக்காளர்களில், 93 ஆயிரத்து 155 பேர் வாக்களித்து இருந்தனர். இது 69.98 சதவீதம் வாக்குப்பதிவு ஆகும்.
மொத்தம் பதிவான வாக்குகளில் செல்லாத வாக்குகளை கழித்து 82 ஆயிரத்து 62 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருந்தன. இதில் எம்.ஜி.ஆர். 60 ஆயிரத்து 510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தங்கராஜ் என்ற வல்லரசு 28,026 வாக்குகள் பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் எம்.ஜி.ஆர். 67.40 சதவீதம் வாக்குகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட 5 வேட்பாளர்களில் யாரும் 0.50 சதவீதம் வாக்குகள் கூட பெறவில்லை.
Related Tags :
Next Story