சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் குக்கருக்கு வாக்கு சேகரிக்கும் அ.ம.மு.க. தொண்டர்


சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் குக்கருக்கு வாக்கு சேகரிக்கும் அ.ம.மு.க. தொண்டர்
x
தினத்தந்தி 24 March 2019 9:00 PM GMT (Updated: 2019-03-25T01:15:28+05:30)

சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் குக்கருக்கு வாக்கு சேகரிக்கும் அ.ம.மு.க. தொண்டர்

வேலூர், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சைக்கிள் வடிவேல் (வயது 47) என்பவர் கடந்த 25 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். தற்போது டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக குக்கர் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

25 நாட்களுக்கு முன்பாக திருச்செங்கோட்டில் மொபட்டில் பிரசாரத்தை தொடங்கிய அவர் ராசிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு சென்றுவிட்டு நேற்று வேலூருக்கு வந்தார். சத்துவாச்சாரியில் அவர் பிரசாரம்செய்தபோது, நிருபர்கள் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பது குறித்து கேட்டனர். அதற்கு அவர், குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதனால் பிரசாரம் செய்வதாகவும் கூறினார்.

Next Story