அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட எதிர்ப்பு; வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல் அமைச்சராக உள்ள ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல் அமைச்சராக உள்ள பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அக்கட்சியின் முன்னாள் உறுப்பினரான கே.சி. பழனிசாமி தொடர்ந்த இந்த வழக்கில், கட்சி விதிகளின்படி வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதற்கு பொது செயலாளர் ஒருவருக்கே அதிகாரம் உள்ளது. அதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்து உள்ளார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை விமர்சித்ததற்காக கே.சி. பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த மனு மீது நடந்த விசாரணையில் வழக்கின் தீர்ப்பினை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
Related Tags :
Next Story