பணம் கொடுத்து வாக்குகளை பெறும் நிலை மாற வேண்டும் கமல்ஹாசன் பேச்சு


பணம் கொடுத்து வாக்குகளை பெறும் நிலை மாற வேண்டும் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2019 2:00 AM IST (Updated: 1 April 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுத்து வாக்குகளை பெறும் நிலை மாற வேண்டும் என்று திண்டிவனத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் பேசினார்.

திண்டிவனம்,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பின்பொய்யாமொழி, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஷாஜி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே நேற்று திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நல்ல கட்சியை மனம் விரும்பி தேடினால் மக்கள் நீதிமய்யத்தின் டார்ச் லைட் சின்னம் கிடைக்கும். ஒரு புரட்சியின் நுனியிலும், மாற்றத்தின் நுனியிலும் தமிழக மக்கள் நின்று கொண்டுள்ளர்கள். நேர்மையும், மக்கள் நீதி மய்யமும் நெருங்கிய உறவினர்கள் ஆவார் கள். எங்களுக்கு வாக்களித்து பதவிக்கு கொண்டு வந்தவர்கள் சரியில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தால், சம்பந்தப்பட்டவரிடம் உடனடியாக ராஜினாமா கடிதம் பெறப்படும்.

உங்கள் ஏழ்மையையும், வறுமையையும் பயன்படுத்தி பணம் கொடுத்து சிலர் தேர்தலில் உங்கள் வாக்குகளை பெறுகின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் வெற்றி பெறும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலை ஓங்கி உரக்க சொல்வார்கள். வாக்கு மையத்திற்கு நூறு மீட்டர் முன்பு நடந்து செல்லும்போது நாட்டை பற்றி சிந்தியுங்கள். மாற்றம் வேண்டும் நாளை நமதே. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Next Story