வைரலாகும் இந்திய வீரர் அடித்த டேவிட் பெக்காம் ஸ்டைல் கர்லிங் ஃப்ரீ-கிக்


வைரலாகும் இந்திய வீரர் அடித்த டேவிட் பெக்காம் ஸ்டைல் கர்லிங் ஃப்ரீ-கிக்
x
தினத்தந்தி 8 Jun 2020 7:35 AM IST (Updated: 8 Jun 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

டேவிட் பெக்காம் ஸ்டைல் கர்லிங் ஃப்ரீ-கிக் அடித்த இந்தியவீரரின் வீடியோ வைரலாகி உள்ளது.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகளும் , பயிற்சிகளும் பெரும் அளவு பாதிக்கப்பட்டு உள்ளன.

ஐரோப்பிய சாம்பியன் ஷிப் மற்றும் கோபா அமெரிக்கா போன்ற போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வைரஸ் காரணமாக அனைத்து முக்கிய கால்பந்து லீக்குகளும் மார்ச் மாதம் முதல்  நிறுத்தப்பட்டன. இருப்பினும், சமீபத்தில் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் மெதுவாக மீண்டு வருகிறது.

பிரீமியர் லீக் ஜூன் 17 முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

சிரீஸ் ஏ மற்றும் லா லிகாவும் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்யப்படும்.

தென் கொரியாவில் கே-லீக்கும் மீண்டும் தொடங்கியுள்ளது. தொற்றுநோய் காரணமாக தாமதமாக வந்த சீன சூப்பர் லீக் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை தொடக்கத்தில் தொடங்கப்பட உள்ளது.

முன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் தனது கர்லிங் ஃப்ரீ-கிக்ஸால் பிரபலமானவர், இது எதிர் அணியின் கோல்கீப்பர்களைத் திணறவைக்கும்.அது போல் நம்பமுடியாத துல்லியமான ஃப்ரீ-கிக் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது, இந்த வீடியோவை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) பகிர்ந்து உள்ளது இதுநிச்சயமாக பெக்காமைக் கூட ஈர்க்கும்.




Next Story