கார் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சாவு


கார் மோதியதில்  ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சாவு
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பலியானார்.

பெங்களூரு: பெங்களூரு கொடிகேஹள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. அப்போது சாலையோர நடைபாதையில் நின்று கொண்டு இருந்த 4 பேர் மீது கார் மோதியது.

இந்த விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ரவிசங்கர் (வயது 59) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்த பூவய்யா என்பவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story