கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கூரியர் நிறுவன ஊழியருடன் ஓட்டம்


கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கூரியர் நிறுவன ஊழியருடன் ஓட்டம்
x

Co-operative bank female manager running with courier company employee

கோலார் தங்கவயல்: கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்தவர் ஜெயம்மா. இவரது கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு 3 மகள்கள். மூத்த மகள் மஞ்சுளாவை ஆந்திர மாநிலம் வி.கோட்டாவை சேர்ந்த சுப்ரமணியஜோதி என்பவருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். மஞ்சுளாவின் தங்கை திவ்யா தனது அக்காளின் கணவரான சுப்ரமணியஜோதியை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு(2021) நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திவ்யாவின் கணவர் சுப்ரமணியஜோதி சீனிவாசப்பூர் புறநகர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மனைவி திவ்யாவை கூரியர் நிறுவன ஊழியர் சந்திரசேகருடன் ஓடிவிட்டதாகவும், அவளை சந்திரசேகர் ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், அதனால் தனது மனைவியை மீட்டுத்தரும்படியும் கோரி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் திவ்யா மற்றும் சந்திரசேகரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கூட்டுறவு வங்கிக்கு சந்திரசேகர் அடிக்கடி கடிதங்களை கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு வங்கியின் பொது மேலாளராக பணியாற்றி வந்த திவ்யாவுக்கும், சந்திரசேகருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த சந்திப்பு காதலாக மாறியுள்ளது. அதையடுத்து இருவரும் முல்பாகலில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story