போலீஸ் மோப்ப நாய் 'ஜவாலா' செத்தது
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போலீஸ் மோப்ப நாய் ‘ஜவாலா’ இறந்தது.
தட்சிண கன்னடா மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் 'ஜவாலா' என்ற நாய் பராமரிக்கப்பட்டு வந்தது. 7 வயதான இந்த நாய் 'டாபர்மேன்' இனத்தை சேர்ந்தது ஆகும். தட்சிண கன்னடா குற்றப்பிரிவில் இந்த நாய் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தது. பல்வேறு குற்ற வழக்குகளில் ஜவாலா நாய் போலீசாருக்கு துப்பு கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜவாலா நாய் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. அதற்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் பலனின்றி நேற்று முன்தினம் ஜவாலா நாய் பரிதாபமாக செத்தது. அந்த நாயின் உடல் போலீஸ் மரியாதையுடன் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ், அந்த நாய்க்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
Related Tags :
Next Story