இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; 7 பேர் மாயம் என தகவல்


இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; 7 பேர் மாயம் என தகவல்
x

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பினால் திடீர் வெள்ளத்தில் 7 பேர் மாயமாகியுள்ளனர்.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், குலு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற இடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பினால் திடீர் வெள்ளத்தில் 7 பேர் மாயமாகினர். ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குலு மாவட்டத்தின் சலால் பஞ்சாயத்தில் உள்ள சோஜ் கிராமத்தில் காலை 6 மணியளவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு 7 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார்.

குலு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்மா கூறுகையில்,

காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

குலுவில் உள்ள சோஜ் என்ற கிராமத்தில் ஐந்து கால்நடைகளைத் தவிர குறைந்தது நான்கு பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக மீட்புக் குழுவினர் நடுவழியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

திடீர் வெள்ளத்தால் சேதமடைந்த கட்டிடத்தில் சிக்கியிருந்த மலானா 2 மின் திட்டத்தில் பணிபுரியும் சுமார் 25-30 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Next Story