பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி


பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி
x

பீகாரில் மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது


பீகாரில் மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பீகார் முழுவதும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர்.. சரண் மாவட்டத்தில் 6 பேர் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலையின் போது வீட்டிலேயே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story