ரூ.10 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்


ரூ.10 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Nov 2022 8:32 PM GMT (Updated: 27 Nov 2022 8:32 PM GMT)

பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.10 லட்சம் போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

பேகூரு:-

பெங்களூரு பேகூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 பேர் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவர்கள் கேரளாவை சேர்ந்த இஜாஜ் மற்றும் அராபத் என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்தவர்களிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி, அவற்றை கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. கைதான 2 பேரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 2 பேர் மீதும் பேகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story