கோமாரி நோயால் 10 ஆயிரம் கால்நடைகள் செத்துள்ளன


கோமாரி நோயால் 10 ஆயிரம் கால்நடைகள் செத்துள்ளன
x
தினத்தந்தி 30 Nov 2022 2:08 AM IST (Updated: 30 Nov 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் கோமாரி நோயால் 10 ஆயிரம் கால்நடைகள் செத்துள்ளதாக மந்திரி பிரபு சவான் கூறினார்.

கோலார் தங்கவயல்-

கோமாரி நோய்

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா ராமசந்திரபுரா ஆசிரமத்தில் உள்ள கோசாலைக்கு நேற்று மந்திரி பிரபு சவான் சென்று ஆய்வு செய்தார். அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் பசுக்களுக்கு பூஜை செய்து வழிபட்டார். அதை தொடர்ந்து இரபனஹள்ளி மற்றும் அங்கஷெட்டிஹள்ளி ஆகிய கிராமங்களு்க்கு சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதித்ததை பார்வையிட்டார்.

பின்னர் கோமாரி நோயை தடுப்பு குறித்து கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மந்திரி பிரபு சவான் பேசுகையில் கூறியதாவது:-

கால்நடைகளை பாதிக்கும் கோமாரி நோயை தடுக்க தேவையான தடுப்பூசி மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோமாரி நோய் பாதிப்பால் மாநிலத்தில் கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 413 கால்நடைகள் செத்துள்ளன.

தடுப்பூசி செலுத்த வேண்டும்

உரிய நேரத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதால் மற்ற கால்நடைகள் தப்பித்துள்ளன. இனி மேலும் கால்நடைகள் இறக்காமல் இருக்க கால்நடை மருத்துவர்கள் உரிய கவனம் செலுத்தி கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். கால்நடைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

கால்நடைகளை பாதுகாக்க உரிய நேரத்தில் அவற்றுக்கு எல்.எஸ்.டி., எப்.எம்.டி. தடுப்பூசிகளை உரிய நேரத்தில் செலுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும். இந்த விவகாரத்தில் கால்நடைத்துறை அதிகாரிகள் உரிய முறையில் செயல்பட வேண்டும். கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கிராமங்கள் தோறும் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story