கர்நாடகத்தில் 1,073 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் 1,073 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 25 ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,073 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 1,008 பேர் பாதிக்கப்பட்டனர். பீதர், சித்ரதுர்கா, தார்வார், ஹாசன், ஹாவேரி, கோலாரில் தலா 2 பேருக்கும், தட்சின கன்னடாவில் 10 பேருக்கும், மைசூருவில் 12 பேர், துமகூருவில் 8 பேர், உடுப்பியில் 4 பேர், சிக்கமகளூருவில் 3 பேர், தாவணகெரே, கலபுரகி, கொப்பல், ராமநகர், சிவமொக்காவில் தலா ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதுவரை 39 லட்சத்து 70 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஒருவர் உயிர் இழந்துள்ளார். ஒட்டு மொத்தமாக 40 ஆயிரத்து76 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். நேற்று ஒரே நாளில் 834 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து 24 ஆயிரத்து 232 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மாநிலத்தில்6 ஆயிரத்து 134 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.