11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
கர்நாடகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
இதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சீமந்த்குமார் சிங்
* பெங்களூருவில் கூடுதல் டி.ஜி.பி.யாகவும், கர்நாடக அரசின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றி வந்த மாலினி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூருவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* ஊழல் தடுப்பு படை கூடுதல் டி.ஜி.பி.யாக பணி செய்து வந்த சீமந்த்குமார் சிங், கர்நாடக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.யாக இனி பணி செய்வார்.
* கர்நாடக ஆயுதப்படை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ரவி, கர்நாடக அரசின் முதன்மை செயலாளராக இனி தனது பணியை மேற்கொள்வார்.
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த அஜய் கிலோரி, சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குனரகத்தின் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* பெங்களூருவில் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த யத்தீஷ் சந்திரா, குற்றம்-2 துணை போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
* கலபுரகியில் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்த அமர்நாத் ரெட்டி, கலபுரகி உளவுத்துறை போலீஸ் சூப்பிரண்டாக இனி பணியாற்றுவார்.
ஷோபா ராணி
* பல்லாரியில் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீஹரி பாபு, கர்நாடக லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* பெங்களூருவில் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஷோபா ராணி, பெங்களூரு பெருநகர பணிக்குழு போலீஸ் சூப்பிரண்டாக இனி தனது பணியை செய்வார்.
* மைசூருவில் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்து வந்த சஜித், கர்நாடக லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* விஜயாப்புராவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ராம் அரசித்தி, கர்நாடக லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டாக இனி பணியாற்றுவார்.
* பெலகாவியில் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பாபாசாப் நேமகவுடா, பெலகாவி உளவுத்துறை போலீஸ் சூப்பிரண்டாக இனி பணியாற்றுவார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.