பூஸ்டர் தடுப்பூசியை 11 லட்சம் பேர் எடுத்து கொள்ளவில்லை
சிவமொக்காவில் கொரோனாவை தடுக்க பயன்படுத்திய பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 11 லட்சம் பேர் செலுத்தி கொள்ளவில்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர்.
சிவமொக்கா:-
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்கும், அந்த தொற்றும் பரவாமல் தடுப்பதற்கு கொரோனா தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தடுப்பூசிகளை அனைவரும் செலுத்தி கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவி,ஷீல்டு கோவேக்ஷின், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதில் முதல் 2 தடுப்பூசிகளை பொதுமக்கள் ஆர்வமாக செலுத்தி கொண்டனர். ஆனால் 3-வது தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு ஆர்வம் குறைந்தது. எந்த வகையான தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டாலும், பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மத்திய அரசு சுதந்திர தினத்தன்று 75 நாட்கள் இலவசமாக கால அவகாசம் வழங்கியது.
11 லட்சம் பேர் செலுத்தவில்லை
மேலும் பல்வேறு இடங்களில் முகாம்களும் நடத்தப்பட்டது. அதன்படி கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்த முகாம்கள் செயல்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் இந்த பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 11 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 22-ந் தேதி வரை எடுக்கப்பட்ட ஆய்வில் 30 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதில் பத்ராவதியில் 6,430, ஒசநகரில் 4,710, சிகாரிபுராவில் 1,640, சிவமொக்காவில் 8,420, சொரப்பாவில் 2,570 உள்பட இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி கையிருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.