கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய 11 பேர் கைது


கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்ற  போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய 11 பேர் கைது
x

கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலபுரகி: கலபுரகியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஸ்ரீமந்த் இல்லால். இந்த நிலையில் கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க ஸ்ரீமந்த் தலைமையிலான போலீசார் மராட்டியத்திற்கு சென்று இருந்தனர். அப்போது ஸ்ரீமந்த் மீது 30 பேர் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. மேலும் ஸ்ரீமந்த்தின் துப்பாக்கியையும் அந்த கும்பல் எடுத்து சென்றது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீமந்த்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்ட உள்ளார். இதற்காக கேரளாவில் இருந்து நேற்று ஆம்புலன்ஸ் விமானம் கலபுரகிக்கு வந்தது. அந்த ஆம்புலன்ஸ் விமானத்தில் இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீமந்த் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட உள்ளார். இதற்கிடையே ஸ்ரீமந்த் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 11 பேரை உல்சூர் போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 20 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story