இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள்


இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள்
x

இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியா - சீன எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவிவரும் சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஏவுகணைகள் வெகு விரைவில் தயாரிக்கப்பட்டு இந்திய - சீன எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவிக்கின்றது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை 'பிரளய்' ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை இந்திய உந்துவிசை ஏவுகணை திட்டத்தின்கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டது.

அண்மையில் கடற்படை தளபதி ஹரி குமார் பேசுகையில், "எல்லையில் எதிரிகளை எதிர்கொள்ள ஏவுகணைகளை பெருமளவில் தயாரித்து தயார் நிலையில் வைக்க மறைந்த முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறப்புத் திட்டமே வகுத்திருந்ததாக சுட்டிக் காட்டியிருந்தார்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்,120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


Next Story