இந்தியாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா


இந்தியாவில்  மேலும் 121 பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 121 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46.80.215 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 5,30,722 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,319 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,47,174 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 220.14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story