டெல்லியில் புதிதாக 1,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!


டெல்லியில் புதிதாக 1,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
x

கோப்புப்படம்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசிய தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 13,511 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,263 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,55,771 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 984 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,24,951 ஆக அதிகரித்துள்ளது. தற்போது டெல்லியில் 4,509 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதன்படி கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,311 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story