நீரா ராடியா மீதான 14 வழக்குகள் ரத்து


நீரா ராடியா மீதான 14 வழக்குகள் ரத்து
x

நீரா ராடியா மீதான 14 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஐ அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் ஆட்சியின்போது தொழிலதிபர்கள் சார்பில் ஒன்றிய அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக வருமான வரித்துறை 14 வழக்குகள் பதிவு செய்து முதற்கட்ட விசாரணை தொடங்கியது. இந்நிலையில் நீரா ராடியா மீதான வழக்குகளை சிபிஐ ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

8000 தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்த பிறகு சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் தொழிலதிபர்கள் சார்பில் மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story