வியாபாரி கொலை மங்களூரில் 144 தடை உத்தரவு
சூரல்கல் அருகே வியாபாரி கொலை செய்யப்பட்டதையடுத்து 4 போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் 144 தடை உத்தரவு விதித்துள்ளனர்.
மங்களூரு:-
வியாபாரி கொலை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் சூரத்கல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அடுத்த காடிபல்லா 4-வது பிளாக்கை சேர்ந்தவர் ஜலீல் (வயது 45). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கடைக்குள் புகுந்து ஜலீலை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில் வலிதாங்க முடியாத அவர் கதறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து
தப்பியோடிவிட்டனர். இது குறித்து சூரத்கல் போலீசாருக்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜலீல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை குறித்து போலீசார் விசாரித்தனா. அதில் எதற்காக கொலை நடந்தது என்பது தெரியவில்லை. மத மோதல்களால் கொலை நடந்திருக்கலாம் கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் மத மோதல் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஜலீல் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களிடம் நன்றாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த கொலையில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது.
144 தடை உத்தரவு
இது குறித்து நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறும்போது:- ஜலீல் கொலைக்கான காரணம் தெரியவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பான ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்துள்ளது. அதை வைத்து 5 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக பிரத்யேக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.அவர்கள் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டது முஸ்லீம் நபர் என்பதால் மத மோதல் ஏற்படாதவாறு தடுப்பதற்கு போலீஸ் தரப்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சூரத்கல், பஜ்பே, பணம்பூர், காவூர் ஆகிய 4 போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வருகிற 27-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி யார் செயல்பட கூடாது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.