கர்நாடகத்தில் புதிதாக 1,837 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,837 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 1,837 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 29 ஆயிரத்து 27 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 1,108 பேருக்கும், மைசூருவில் 141 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாரி, தார்வார், கொப்பலில் தலா ஒருவர் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஒரே நாளில் 1,017 பேர் குணம் அடைந்தனர். 10 ஆயிரத்து 922 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.32 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story