'கிருஷி உடான்' திட்டத்தில் தமிழ்நாட்டில் 2 விமான நிலையங்கள் தேர்வு மத்திய அரசு தகவல்
தமிழ்நாட்டில் கோவை மற்றும் திருச்சி விமானநிலையங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை, வேளாண் பொருட்களை கையாளும் கிருஷி உடான் திட்டம் குறித்தும், தமிழ்நாட்டில் அந்தத்திட்டம் செயல்படுத்தப்படும் விமானநிலையங்கள் பற்றியும் கேட்டிருந்தார்.
அதற்கு மத்திய சிவில் விமானப்போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் நேற்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், "சீக்கிரம் அழிந்துபோகும் வேளாண் பொருட்களை நாட்டில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குறிப்பாக வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான இடங்களில் இருந்து எடுத்துச்செல்வதை நோக்கமாகக் கொண்டதே கிருஷி உடான் திட்டம்.
இந்தத்திட்டத்தில் தமிழ்நாட்டில் கோவை மற்றும் திருச்சி விமானநிலையங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன. இதில் கோவை, திருச்சி உள்பட 16 விமானநிலையங்களில் குளிர்பதன வசதி செய்யப்பட்டு உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story