கைது செய்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்...!


கைது செய்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்...!
x

கைது செய்த பெண்ணை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வங்கதேசத்துக்குள் நுழைய முயன்ற பெண்ணை 2 (பி.எஸ்.எஃப்) எல்லை பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் அப்பெண்ணை கைது செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து அப்பெண் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தா எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story