நீச்சல் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப சாவு


நீச்சல் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப சாவு
x

பெங்களூருவில் பள்ளிக்கு செல்லாமல் குளிப்பதற்காக நீச்சல் குளத்திற்கு சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஒரு ஊழியரை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு:-

2 சிறுவர்கள் சாவு

பெங்களூரு ஐரகணஹள்ளி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் மோகன்(வயது 13). அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஜெயந்த். இவர்கள் இரண்டு பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலையில் வீட்டிலிருந்து மோகன், ஜெயந்த் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் பள்ளிக்குச் செல்லாமல் குளிப்பதற்காக நீச்சல் குளத்திற்கு செல்ல முடிவு செய்தனர்.

இதை அடுத்த ஜே.பி நகர் 7-வது ஸ்டேஜில் உள்ள ஒரு தனியார் நீச்சல் குளத்திற்கு மாணவர்களான மோகன், ஜெயந்த் சென்றனர். அங்கு 2 பேரும் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்

படுகிறது. இருவருக்கும் நீச்சல் தெரியாதால் ஆழத்தில் மூழ்கினர். சம்பவ இடத்தில் யாரும் இல்லை என்பதால், 2 பேரும் காப்பாற்ற ஆள் இல்லாமல் நீரில் மூழ்கினர். இந்நிலையில் மகன்கள் வீட்டிற்கு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் அவர்களை தேடி அழைந்தனர்.

3 பேர் மீது வழக்கு பதிவு

இந்நிலையில் நீச்சல் குளத்தில் மாணவர்கள் மூழ்கி இறந்து கிடந்ததை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்து கோணணன குண்டே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சென்று 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவர்கள் 2 பேரும் குளிப்பதற்கு சென்றபோது, நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற பெற்றோர், நீச்சல் குளத்தின் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினர். குளத்தில் ஊழியர்கள் இல்லாமல் எப்படி சிறுவர்களை அனுமதித்தனர்.

மேலும் சிறுவர்கள் வந்ததை கவனிக்காமல் ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முறையிட்டனர். அப்போது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அந்த நீச்சல் குளத்தில் வேலை பார்த்து வந்த மொயின், நரேஷ், சேகர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் மொயினை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊழியர் கைது

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிருஷ்ணகாந்த் கூறியதாவது:- நீச்சல் குளத்தில் மூழ்கி 2 பேர் இறந்ததில் ஊழியர்களின் அலட்சியமாக இருந்த தெரியவந்தது. ரூ.100 வாங்கி கொண்டு சிறுவர்களை குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர். இந்த நீச்சல் குளம் 2 முதல் 6 அடி ஆழம் கொண்டது. இது சிறுவர்களுக்கு தெரியவில்லை.

ஊழியர்களும் கூற தவறிவிட்டனர். மேலும் சிறுவர்களை அவர்கள் கண்காணிக்க தவறிவிட்டனர். அவர்களின் அலட்சியத்தால் 2 சிறுவர்களும் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மொயின் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். இது பற்றி கோணணன குண்டே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story