தெரு நாய் கடித்ததில் 2 பசுமாடுகள் செத்தன
குடகில், தெரு நாய் கடித்ததில் 2 பசுமாடுகள் செத்தன.
குடகு;
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லுவை அடுத்த பேகூர் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகளை குறி வைத்து கடித்து குதறி வருகிறது.
இந்நிலையில் நேற்று பேகூர் கிராமத்தை சேர்ந்த பொன்னஞ்சே என்பவருக்கு சொந்தமான 50 ஆயிரம் மதிப்பிலான பசுமாடு மற்றும் சுப்பிரமணியா என்பவருக்கு சொந்தமான ஒரு பசுமாடு என 2 பசுமாடுகளை தெருநாய் கடித்ததில் காயமடைந்து செத்தது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் உதவி தொகையும் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story