பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்கள் மின் வினியோகம் தடை
கோலார் தங்கவயலில் பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்கள் மின் வினியோகம்தடை செய்வதாக பெஸ்காம் அறிவித்துள்ளது.
கோலார் தஙகவயல்
கோலார் தங்கவயலில் மாதம் ஒருமுறை சீரமைப்பு பணி காரணமாக பகல் நேரங்களில் மின்தடை ஏற்படும். முன்னதாக இதுகுறித்து பெஸ்காம் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துவிடுவார்கள்.
அதன்படி இந்த மாதம் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 2 நாட்கள் மின் வினியோகம் தடைப்படும் என்று பெஸ்காம் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெஸ்காம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் மற்றும் மின் வயர்கள், மின் கம்பங்கள் சீரமைப்பதற்கான பணிகள் இன்று (சனிக்கிழமை) தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.
இந்த பணிகளால் கோலார் தங்கவயல் முழுவதும் இந்த 2 நாட்களாக மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின் வினியோகம் தடை இல்லாமல் வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த 2 நாட்கள் பெஸ்காம் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.