அசாம் கூலி தொழிலாளிகள் தாக்கியதில்2 பேர் காயம்


அசாம் கூலி தொழிலாளிகள் தாக்கியதில்2 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் அசாம் கூலி தொழிலாளிகள் தாக்கியதில் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் கூட்டாளிகள் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர்.

சிக்கமகளூரு:-

பணம் கொடுக்கல், வாங்கல்

சிக்கமகளூரு மாவட்டம் மல்லந்தூர் அருகே உள்ள சிறுவாசே கிராமத்தில் அசாமை சேர்ந்த ஏராளமானோர் கூலி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேஷ், மற்றும் ஒரு சிலருக்கும், அசாம் கூலித் தொழிலாளிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து

வந்தது. இதனால் அடிக்கடி இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட மோதலில் அசாம் கூலித் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜேஷ் மற்றும்

அவரது கூட்டாளிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதை பார்த்து கிராம மக்கள் சிலர் தடுக்க வந்தனர். அவர்கள் மீது கூலித் தொழிலாளிகள் தாக்கினர். இதில் ராஜேஷின் கூட்டாளிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை கிராம மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கிராம மக்கள் புகார்

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மல்லந்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள் அசாம் கூலி தொழிலாளிகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. பணம் கொடுத்து விட்டு திரும்ப கேட்டால் அதற்கு தாக்குதல் நடத்துவதாக கூறினர்.மேலும் இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.அதை கேட்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடம் சிறுவாசே கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மல்லந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story