மாடால் விருபாக்ஷப்பா மகன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
லட்சம் வழக்கில் தொடர்புடைய மாடால் விருபாக்ஷப்பா மகன் மீது லோக் அயுக்தா போலீசார் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
பெங்களூரு:-
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்திற்கு ரசாயன பொருட்கள் வழங்க டெண்டர் கோரிய விவகாரத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து காண்டிராக்டர் கொடுத்த புகாரின் பேரில் பிரசாந்தை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர். அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் டெண்டர் பணிகளுக்கு லஞ்சம்பெற்றது தெரிந்தது.
இதையடுத்து லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பிரசாந்த் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே லோக் அயுக்தா சோதனையின்போது கிரசென்ட் சாலையில் உள்ள அலுவலகத்தில் ரூ.1½ லட்சமும், கங்காதர் பகுதியில் ரூ.45 லட்சமும் சிக்கி இருந்தது. மேலும் பிரசாந்தின் உறவினர் சுரேந்திராவிடம் இருந்து ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மாடால் விருப்பாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.