கடலோர பகுதியை கண்காணிக்க மேலும் 2 ரேடார் மையங்கள்


கடலோர பகுதியை கண்காணிக்க மேலும் 2 ரேடார் மையங்கள்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கடலோர பகுதிகளில் கண்காணிக்க மேலும் 2 ரேடார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மங்களூரு:-

கர்நாடகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப், ஹலால், படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் பல அரங்கேறின. குறிப்பாக கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்கள் பரபரப்பாக காணப்பட்டன. கடந்த ஆண்டு மங்களூருவில் ஆட்டோவில் கொண்டு சென்ற குக்கர் வெடிகுண்டு தவறுதலாக வெடித்தது. பயங்கரவாதியான ஷாரிக் என்பவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னால் மூளையாக செயல்பட்டார். அவரை கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத செயலுக்கு முன்னதாக மங்களூரு கடலோர பகுதிகளில் சாட்டிலைட் போன்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இதனால் அந்த மாவட்டங்கள் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்க கூடும் என என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. எனவே கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களை கண்காணிப்பதற்காக தற்போது சூரத்கல், பட்கல் பகுதிகளில் ரேடார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 மையங்கள் கர்நாடகத்தின் 320 கிலோ மீட்டர் தூர கடற்கரையை கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் கடலோர பகுதியில் பாதுகாப்பை தீவிரபடுத்தும் விதமாக குந்தாப்புரா, பெலெகேரி ஆகிய 2 பகுதிகளில் புதிதாக 2 ரேடார் மையங்கள் தேசிய கடலோர காவல்படை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story