நகைக்கடையில் திருடிய நேபாளத்தை சோ்ந்த 2 பேர் கைது; 35 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்பு


நகைக்கடையில் திருடிய நேபாளத்தை சோ்ந்த 2 பேர் கைது; 35 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்பு
x

பத்ராவதியில், நகைக்கடையில் திருடிய நேபாளத்தை சோ்ந்த 2 பேரை போலீசாா் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 35 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது.

சிவமொக்கா;

நகைக்கடையில் திருட்டு

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. கடந்த 9-ந்தேதி இரவு கடையின் உாிைமயாளர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மர்மநபர்கள் சிலர் வெல்டிங் கட்டரை வைத்து கடையின் ஷெட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் கடையில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்களை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் மறுநாள் கடைக்கு வந்த கடையின் உரிமையாளர், ஷெட்டர் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது கடையில் இருந்த 1¼ கிலோ தங்கநகைகள், 50 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் பழுது பார்க்க வைத்திருந்த 250 கிராம் தங்க நகைகள் திருடுபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் அவருக்கு மா்மநபர்கள் கடைக்குள் புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து அவர், பத்ராவதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவா்கள் நேபாளத்தை சேர்ந்தவா்கள் என்பதும், நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்டதையும் ஒப்பு கொண்டனர். இதையடுத்து அவர்களை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவா்களிடம் இருந்து 35 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக, கைதான 2 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.


Next Story