பஞ்சாப்பில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
பஞ்சாப்பில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்டியாலா,
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பஞ்சாப் மாநில பாட்டியாலா போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அங்குள்ள ரத்தன் நகரை சேர்ந்த குல்பிரீத் சிங், ரஞ்சித் நகரை சேர்ந்த சோனு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.74,700 மற்றும் 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story