கல்லூரியில் மோதிக்கொண்ட 2 மாணவிகள்


கல்லூரியில் மோதிக்கொண்ட 2 மாணவிகள்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் 2 மாணவிகள் மோதிக்கொண்டனர்.

பெங்களூரு: பெங்களூரு குமாரசாமி லே-அவுட் பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவி கேன்டீனில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இன்னொரு மாணவி, சாப்பிட்டு கொண்டு இருந்த மாணவியிடம் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. 2 மாணவிகளும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதனை கேன்டீனில் சாப்பிட்டு கொண்டு இருந்த சக மாணவிகள் வேடிக்கை பார்த்தனர். 2 பேரையும் விலக்கி விட யாரும் முயற்சிக்கவில்லை. மாணவிகள் மோதி கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. மாணவிகள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.


Next Story