கைதான 2 பயங்கரவாதிகளும் இந்தியாவில் சிரியா சட்டத்தை அமல்படுத்த விரும்பினர்


கைதான 2 பயங்கரவாதிகளும்  இந்தியாவில் சிரியா சட்டத்தை அமல்படுத்த விரும்பினர்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் கைதான 2 தீவிரவாதிகளுக்கும் இந்தியாவில் சிரியா சட்டத்தை அமல்படுத்த விரும்பியதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சிவமொக்காவை சேர்ந்த சையது யாசின் (வயது 21), மங்களூருவை சேர்ந்த மாஷ் முனீர் அகமது (22) ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்கள் 2 பேரும் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட 2 பேரும் இந்தியா இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தில் இருந்து உள்ளனர். மேலும் இந்தியாவில் சிரியா நாட்டின் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேலை செய்து வந்து உள்ளனர். மேலும் 2 பேரும் தேசிய கொடியை எரித்து உள்ளனர். குண்டுகளை தயாரிக்க பெரும்பாலான பொருட்களை இந்தியாவில் தான் வாங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story