பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான 2 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு-வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற முடிவு


பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான 2 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு-வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற முடிவு
x
தினத்தந்தி 4 Aug 2022 10:35 PM IST (Updated: 4 Aug 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு, சேலத்தில் கைதான 2 பயங்கரவாதிகளும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பதிவான வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு, சேலத்தில் கைதான 2 பயங்கரவாதிகளும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பதிவான வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட உள்ளது.

2 பயங்கரவாதிகள் கைது

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த மாதம் (ஜூலை) திலக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கைது செய்திருந்தனர். அவர் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியான அப்துல் அலி என்ற ஜுபான் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள்.

அவர்கள் 2 பேரும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அந்த அமைப்பில் சேருவதற்காக ஆப்கானிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபடவும், குடியுரிமை சட்டத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக செயல்படவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. கைதான 2 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற முடிவு

அவர்களது போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றதால், தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவா்கள் 2 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிைறயில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, 2 பயங்கரவாதிகளும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் கைதானது குறித்து திலக்நகர் போலீசில் பதிவான வழக்கு கூடிய விரைவில் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட உள்ளது.


Next Story