அரசு பஸ் மோதியதில் 2 பேர் பரிதாப சாவு
அரசு பஸ் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
துமகூரு: துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா நிட்டூர் அருகே தொட்டகுனி சிவசந்திர கேட் பகுதியில் நேற்று காலை கர்நாடக அரசு பஸ்சும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பஸ்சின் வலதுபுற சக்கரமும் துண்டானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா கண்டிகெரே கிராமத்தை சேர்ந்த கிரீஷ் (வயது 37), மான்யா (17) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் ராகேஷ் (21) பலத்த காயமடைந்தார். அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பஸ்சில் வந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக குப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story