காம்பவுண்டு சுவர் இடிந்து 2 வாலிபர்கள் சாவு
பெங்களூருவில் காம்பவுண்டு சுவர் இடிந்து 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நைஸ் ரோடு, கின்கோ ஜங்ஷன் அருகே ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தை சுற்றி பெரிய காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் அந்த காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகி இருந்ததால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த நிலையில், நேற்று மதியம் திடீரென்று அந்த காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்குநின்ற 2 வாலிபர்கள் மீது காம்பவுண்டு சுவர் விழுந்து அமுக்கியது.
இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். விசாரணையில், அவர்கள் வால்மிகிநகா், 10-வது கிராஸ், 2-வது மெயின் ரோட்டை சேர்ந்த பாலா (வயது 30), ராஜமணி (35) என்று தெரியவந்தது. இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.