மதுபானம் வாங்குவதற்கு பணம் தராததால் தாத்தா பாட்டியை கொன்ற பேரன்..!


மதுபானம் வாங்குவதற்கு பணம் தராததால் தாத்தா பாட்டியை கொன்ற பேரன்..!
x

மதுபானம் வாங்க பணம் தராததால் தாத்தா பாட்டியை பேரன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புடான்,

மதுபானம் வாங்க பணம் தராததால் தாத்தா பாட்டியை 20 வயது இளைஞன் கொன்று அவர்களின் உடலை தனித்தனி வீடுகளில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஹிமேஷ் என்ற 20 வயது இளைஞன், டெல்லியில் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் புடானில் உள்ள டாம்ரி கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹிமேஷின் தாத்தா, பாட்டி இருவரும் சென்றனர். அவர்களுடன் ஹிமேசும் சென்றுள்ளார்.

அங்கு வைத்து மதுபானம் வாங்குவதற்கு பணம் கேட்ட நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஹிமேஷ் தாத்தா பாட்டியைக் கொன்றதாக கூறப்படுகிறது. அவர்களது உடல்களை இரண்டு தனி வீடுகளில் வீசிவிட்டு, ஹிமேஷ் கிராமத்தை விட்டு ஓடியுள்ளார்.

இதையடுத்து பகுதியளவு அழுகிய நிலையில் இருந்த கணவன்-மனைவியின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் இறந்தவர்களின் மகன் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story