சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை; பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை; பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு:

சிறுமி கற்பழிப்பு

பெங்களூரு பேகூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிசையில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ந் தேதி அந்த தம்பதி வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது சிறுமி மட்டும் குடிசையில் தனியாக இருந்தாள். அந்த சந்தர்ப்பத்தில் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ் ருத்ரலால் என்ற வாலிபர் குடிசைக்குள் புகுந்தார்.

பின்னர் தனியாக இருந்த சிறுமியை, அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி இருந்தாள். அதன்பேரில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பேகூரு போலீசார், சந்தோஷ் ருத்ரலால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தலைமறைவாக இருந்த சந்தோஷ் ருத்ரலாலை பேகூரு போலீசார் கைது செய்தார்கள்.

20 ஆண்டு சிறை தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சந்தோஷ் ருத்ரலால் மீது பேகூரு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், சிறுமியை கற்பழித்த வழக்கில் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது குடிசைக்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியை சந்தோஷ் ருத்ரலால் கற்பழித்தது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது.

அவருக்கு, போக்சோ சட்டத்தின்படி 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும், சந்தோஷ் ருத்ரலாலிடம் இருந்து பெறப்படும் அபராதத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்தையும் சிறுமி குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story